Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலையை பிரித்தானியாவிடம் கோரிய இந்தியா: வெளியான பின்னணி

0 5

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலை ஒன்று பிரித்தானியா (Britain) ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் இந்தியாவிற்கு (India) ஒப்படைக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஏராளமான பழங்கால பொருட்கள் பல்வேறு நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அவ்வாறான பொருட்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, தமிழக கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 60 செ.மீ. உயரம் கொண்ட திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலை ஒன்று பிரித்தானியா ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் காரணமாக 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலையை பெறுவதற்கு இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், சிலையை பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பலனாக சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்க பல்கலைக்கழகம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பல்கலைக்கழக அறக்கட்டளை ஆணையத்திடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.