D
இஸ்ரேலிய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய போர் அமைச்சரவையின் முக்கியஸ்தராக கருதப்படும் பென்னி கிராண்ட்ஸ் (Benny Gantz ) என்பவரே இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தத்தின் பின்னர் காஸா பகுதிக்கான தெளிவான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) முன்வைக்காததால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவர் அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், டெல் அவிவ் நகரில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஆழ்ந்த வருத்தத்தின் காரணமாக இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.