D
பாணந்துறை, நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் இரசாயனம் விஷமாகியதால் சுமார் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
30 பேர் திடீர் சுகவீனமடைந்துள்ளதாக பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாசனைத் திரவியங்கள் மற்றும் ஏனைய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றில் கலவை தயாரிக்கும் போது இரசாயன பொருளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.
இந்நிலையில் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு பொலிஸ் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
நோய்வாய்ப்பட்டவர்கள் குழுவொன்று பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மற்றுமொரு குழு தனிப்பட்ட சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.