D
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரைக் குடித்து கொழும்பை அண்டிய மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
முறையான சுத்திகரிப்பு நடவடிக்கையின் பின்னரே மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
“சுத்திகரிப்புக்கு பின்னர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புக்கு வழங்கப்படும் தண்ணீர் தொடர்ந்து ஆய்வக சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றது.
இதற்கமைவான, பரிசோதனை முடிவுகளின்படி நுண்ணுயிரியல் சோதனைகள் மற்றும் அனைத்து இரசாயன சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கை தரநிலையில், எந்த விதமான நோய்க்கிருமிகளும் இல்லை எனவும், வீண் அச்சத்தை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.