D
நடிகர் பிரேம்ஜி திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அவர் இந்து என்ற பெண்ணை திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
மிக எளிமையாக நடந்த இந்த திருமணத்தின் சென்னை 28 கேங் நடிகர்கள் மொத்தமாக கலந்துகொண்டனர். ஆனால் பிரேம்ஜியின் அப்பா கங்கை அமரனின் சகோதரர் இளையராஜா கலந்துகொள்ளவில்லை.
பிரேம்ஜி திருமணத்திற்கு இளையராஜா வராதது ஏன் என சர்ச்சை வெடித்து இருக்கிறது. இணையத்தில் இது பற்றி பல வதந்திகளும் வர தொடங்கி இருக்கிறது.
இளையராஜா முன்பே பிரேம்ஜி மற்றும் மணப்பெண்ணை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து அவர்களுக்கு கிப்ட் கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தாராம். அவர் ஏற்கனவே உறுதி செய்த சில இசை கச்சேரி தான் அவர் திருமணத்திற்கு வராமல் போக காரணம் என தற்போது தகவல் வந்திருக்கிறது.