D
இன்றைய ராசிபலன் ஜூன் 13, 2024, குரோதி வருடம் வைகாசி 31, வியாழக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள திருவோணம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்களுடன் நீண்ட தூர பயணம் செல்ல வாய்ப்புள்ளது. இன்று உங்களின் கோபத்தையும், நடவடிக்கைகள் எல்லாம் கூடுதல் கவனம் தேவை.பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். வேலையில் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். இன்று உங்கள் வேலையில் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பப் பொறுப்புகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பணிகளை நிறைவேற்றுவதில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடிய நாள். அரசாங்க வேலை தொடர்பான முயற்சியில் வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கையில் நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம். உங்களுடன் பிறந்தவர்களுடன் ஆன உறவு மேம்படும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் பெறுவீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று காலை முதலே நல்ல ஆதாயங்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இன்று உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் வேலையில் கடின உழைப்பிற்கு பின்னரே வெற்றி கிடைக்கும். மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான முயற்சியில் ஜாதக பலன் கிடைக்கும். அரசியல் சம்பந்தமான நபர்கள் முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். அன்று உங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்தவும். குடும்பத்திலும், பணியிடத்திலும் சிலரின் விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் அடையும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு சில நல்ல மரண அமையும். மாணவர்கள் போட்டி தேர்வில் சந்திக்க தடைகள் விலகும்.
சிம்மம் ராசி பலன்
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். உங்களின் செல்வம் பெருகும். குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்க முடியும். திடீர் பண ஆதாயம் வாய்ப்புள்ளது. இன்று உங்களின் இனிமையான பேச்சு மற்றும் செயல்பாட்டால் உங்களின் புகழ் அதிகரிக்கும். உங்களின் வேளையில் முன்னேற்றம் அடைய கடின உழைப்பு தேவைப்படும். தெரியாத நபருடன் பண பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் தேவை.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். எதிர்காலம் தொடர்பான நல்ல முடிவு எடுப்பீர்கள். குடும்ப சூழ்நிலை சாதகமாக இருக்கும். இன்று எந்த ஒரு செயல்பாட்டிலும் உங்கள் மனைவியின் ஆதரவு கிடைக்கும். இன்று பணியிடத்தில் உங்களின் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க திட்டமிடல் அவசியம். உங்களின் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் பதவியையும், அதிகாரமும் அதிகரிக்கும். காதல் தொடர்பான விஷயத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்கள் சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா, யாத்திரை செல்ல வாய்ப்பு உண்டு. கடினமான நேரத்தில் தந்தையின் மூலம் ஆதரவு கிடைக்கும். புதிய திட்டங்களை தொடங்குவதற்கு சாதகமான காலம். இன்று எந்த விஷயத்திலும் அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவைப் பெறுவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் இணக்கம் சிறப்பாக இருக்கும். இன்று உங்களின் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு தீரும். இன்று சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. இன்று பணியிடத்தில் யாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அரசு தொடர்பான வேலைகள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்காலத்தை வலுப்படுத்த எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலனை பெறுவீர்கள். இன்று உங்களுக்கு கிடைக்கும் புதிய தொடர்புகள் மூலம் அதிர்ஷ்ட பலனை பெறுவீர்கள். அரசு தொடர்பான வேலை வேகம் எடுக்கும். உங்களின் நிதி நிலைமையை வலுப்படக்கூடிய நாள். இன்று ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கக் கூடிய நாள். இன்று எதிரிகளை எளிதாக சமாளிக்க கூடிய மன உறுதியுடன் செயல்படுவீர்கள். விருந்தினர்களின் திடீர் வருகையாலும் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல வெற்றியை பெற்றிடலாம். குடும்ப உறுப்பினர்களுடன் எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் குறித்து விவாதிப்பீர்கள். இன்று மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் தீரும். பணியிடத்தில் உங்கள் வேலையில் முடிப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படவும். இன்று வீடு, மனை, வாகனம் வாங்கும் உங்கள் முயற்சிகள் நிறைவேறும். அரசியல் ஊழியர்களுக்கு இடம் மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று உலக இன்பங்களை அனுபவிக்க முடியும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனநிலை இருக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகள் மூலம் பிரச்சினைகள் தீரும். மாணவர்கள் போட்டியில் நல்ல வெற்றி பெற்றிடலாம். இன்று வீடு, மனை வாங்குவது தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்களின் சிறப்பான சாதனைகள் படைத்து மகிழ்வீர்கள். இன்று உங்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. காதல் வாழ்க்கையில் இனிமை நிறைந்ததாக இருக்கும். இன்று உங்கள் வேலையை முடிப்பது அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு பெறுவீர்கள். உங்கள் மனைவியின் உள்ளுணர்வைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.