Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

இன்றைய ராசி பலன் 14.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

0 13

இன்றைய ராசிபலன் ஜூன் 14, 2024, குரோதி வருடம் வைகாசி 32 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இன்று நீங்கள் திட்டமிட்ட சில வேலைகள் முடியாததால் எரிச்சல் மனநிலையில் இருப்பீர்கள். தாய் வழி சொந்தங்கள் மூலம் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இன்று குழந்தையின் எதிர்காலம் கொடுத்த கவலைகள் தீரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். குடும்பத்தில் சிலர் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். குடும்ப வாழ்க்கையில் குழப்பங்கள் நிறைந்திருக்கும். என்ற உங்களின் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவார்கள்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகள் செய்யும் வேலைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கை தரம் உயரும். உங்களின் நிதி நிலைமை எதிர்பார்த்ததை விட மேம்படும். ஆடை ஆபரணங்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் உங்களின் கூட்டாளிகள் மூலம் சிறப்பான ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்களின் சோம்பலைக் கைவிட்டு சுறுசுறுப்பாக செயல்பட வேண்டிய நாள். வெற்றிக்கு சாதகமான சூழல் இருக்கும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தொடர்பான பயணம் செல்ல நேரிடும். அதன் மூலம் நல்ல லாபத்தை பெறலாம். வியாபாரிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும் நாள். குழந்தைகள் விஷயத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். என்ற ஆடை ஆபரணங்கள் தொடர்பான ஆசை அதிகரிக்கும். நண்பர்களிடம் இருந்து ஏமாற்றமான செய்திகள் கிடைக்கும். படிப்பு விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். இன்று வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். இன்று உணவு விஷயத்தில் கூடுதல் கட்டுப்பாடு தேவை. குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். இன்று புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வருமானம் அதிகரிப்பதாலும், கையிருப்பு அதிகரித்து மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டிய நாள். இன்று உங்களின் வேலையில் சற்று பணி சுமை ஏற்படும். உங்களின் வருமானம், பொருளாதார நிலை வலுப்பெறும். ஆசிரியர், எழுத்து துறை, கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடிய நாள். இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். உயர் கல்வி தொடர்பான விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வேலையில் நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான விஷயத்தில் சில சிரமங்கள், மன அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு, ஆறுதல் கிடைக்கும். இன்று உங்களின் செயலில் அதிர்ஷ்டம் முழுமையாக ஆதரிக்கும். திட்டமிட்ட செலவுகளை செய்வதாக அவசியம்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று அன்புக்குரியவர்களிடமிருந்து முழு ஆதரவை பெற்றிடலாம். இன்று பெரிய வேலையை செய்து முடித்து மன ஆறுதலை பெறுவீர்கள். பெரியோர், பெற்றோரின் ஆசிர்வாதம் கிடைக்கும். இன்று புதிய ஒப்பந்தங்கள், பிறரிடம் சிக்கி உள்ள பணம் கிடைத்தல் என உங்களின் நிதி நிலைமை பலப்படும். குழந்தைகள் மூலம் இனிமையான முடிவுகளை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி, கௌரவம் அதிகரிக்கும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் நிறைய அலைச்சல் இருக்கும். இருப்பினும் இன்று திட்டமிட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் கடின உழைப்பும், அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும். இன்று உங்களின் பேச்சு, செயலில் கூடுதல் கவனம் தேவை. சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஈடுபட வேண்டாம். இன்று மேடை தொடர்பான பயணம் செல்ல வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் அதிர்ஷ்டம் உயரும். உங்களின் செல்வம், புகழ் அதிகரிக்கும். எதிரிகளை எளிதாக சமாளித்து முன்னேறுவீர்கள். இன்று துறையில் வேலை பார்த்தாலும் அதில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் வேலையில் விரும்பிய வெற்றி அடைய முடியும். குடும்ப விஷயத்தில் இணக்கமான சூழல் இருக்கும். மாணவர்கள் படிப்பில், விளையாட்டு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் கோபத்தை, பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இல்லையெனில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கவனமாக செயல்படவும். இன்று உங்கள் வாழ்க்கை துணை இடம் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆன்மீக நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வேலை தொடர்பாக சற்று மும்முரமாக செயல்படுவீர்கள். வண்டி வாகன பயன்பாட்டில் கூடுதல் கவனம் தேவை.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சொத்து வாங்குவது, பராமரிப்பதற்காக செலவிடுவீர்கள்.. இன்று அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நல்ல ஆதரவு கிடைக்கும். அரசியல் தொடர்பான விஷயத்தில் ஆதாயம் அடைவீர்கள். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் பெற முடியும். காதல் வாழ்க்கையில் புரிதல் சிறப்பாக இருக்கும். இன்று புதிய வருமான வாய்ப்புகளை பெறக்கூடிய நாள்.

Leave A Reply

Your email address will not be published.