D
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக நடித்து வரும் திரைப்படம் GOAT. இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது போஸ்டர்களை பார்த்தவுடன் தெரியவந்தது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறார்கள். சினேகா, மோகன், பிரஷாந்த், லைலா, பிரபு தேவா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் GOAT திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாவதாக அறிவித்துள்ளனர். ஆனால், தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.
GOAT திரைப்படத்தில் டீ ஏஜிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் டீ-ஏஜிங் ஒர்க் முடிந்துவிடும் என முதலில் கூறியுள்ளனர். இந்த நம்பிக்கையில் தான் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இந்த சூழலில், திடீரென டீ-ஏஜிங் வேலைகள் முடிய இன்னும் 10 நாட்கள் கூடுதலாக ஆகும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதனால் படக்குழுவும் சற்று அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஏனென்றால் டீ-ஏஜிங் வேலைகள் முடிந்தால் தான், அதன்பின் DI உள்ளிட்ட மற்ற வேலைகளை செய்ய முடியும் என திட்டம்போட்டு வைத்திருந்தாராம் வெங்கட் பிரபு.
தற்போது டீ-ஏஜிங் வேலைகள் சொன்ன நேரத்தில் முடியவில்லை என்றால் கண்டிப்பாக GOAT திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.