D
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். அடுத்து கமல் உடன் தக் லைப் படத்தில் அவர் நடித்து வருகிறார்.
41 வயதாகும் நடிகர் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று தான் கடந்த பல வருடங்களாக எல்லோரும் கேட்டு வருகிறார்கள். அவரது அப்பா அம்மாவும் சிம்புவுக்காக பெண் பார்ப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தாலும், திருமணம் பற்றி அதன் பிறகு எந்த தகவலும் வருவதில்லை.
கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, நாச்சியார்புரம் போன்ற சீரியல்களில் நடித்து இருக்கும் சின்னத்திரை நடிகை ரேமா அசோக் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
சிம்புவுக்கு திருமணம் ஆகும்போது தான் எனக்கும் திருமணம் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.