D
நடிகை மீனா 80களில் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பின் 90களில் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கலக்கியவர்.
அவர் ரஜினி உடன் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் மிகவும் பிரபலமான படம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதன் பின் பின்னாளில் ரஜினிக்கு ஜோடியாகவே எஜமான், முத்து போன்ற படங்களில் நடித்தார்.
ரஜினி மட்டுமின்றி கமல்ஹாசனுக்கு மகளாக மீனா நடித்து இருக்கிறாராம். Yaadgaar என்ற ஹிந்தி படத்தில் கமலுடன் குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்து இருக்கிறாராம்.
அதன் பின் கமலுக்கு ஜோடியாக அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களை மீனா நடித்தது குறிப்பிடத்தக்கது.