D
சன் டிவி சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கான ஒரு டிவி.
விஜய்யில் இதுவரை வந்த பாடல், ஆடல், சமையல் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் பேராதரவு கொடுத்தார்கள்.
தொலைக்காட்சியும் மீண்டும் மீண்டும் புதிய பெயர்களுடன் நிறைய ஷோக்களை களமிறக்குகிறார்கள், சில ஹிட்டடிக்கவும் செய்கிறது. தற்போது விஜய்யில் ஹிட்டாக ஓடும் நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான்.
இந்த நிலையில் விஜய் டிவி ஒரு புதிய ஷோவை தொடங்கியுள்ளனர். புதிய Digital Cooking Showஆக தொடங்கப்பட்டுள்ள சமையல் நிகழ்ச்சி பெயர் Sunland Samayal.
யூடியூபில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சி இன்று மாலை 6 மணியளவில் தொடங்க இருக்கிறது.
இதன் முதல் நிகழ்ச்சியில் சின்ன மருமகள் தொடர் நாயகி ஸ்வேதா பங்குபெற இருக்கிறார். அடுத்தடுத்த நிகழ்ச்சிகளிலும் சீரியல்கள் நடிகைகள் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது.