Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு ஜோ பைடன் மீது அதிகரிக்கும் அழுத்தம்

0 3

ஜோ பைடன் (Joe Biden) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக வேண்டும் என ஜனநாயக கட்சியினர் மாத்திரமன்றி, அவருக்கு நிதி வழங்கும் முக்கிய நபர்களும் அழுத்தங்களை பிரயோகித்துவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை(Donald Trump) எதிர்கொள்வதற்கான தகுதியுடன் ஜோ பைடன் உள்ளாரா என்பது குறித்து மூடிய சந்திப்பொன்றினை ஜனநாயக கட்சியினர் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ஜனாதிபதி தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என 7 ஆவது காங்கிரஸ் உறுப்பினரும் கோரியுள்ள நிலையில், ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக இறுதியாக நடத்தப்பட்ட விவாதத்தின் போது வார்த்தைகளில் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியமை ஜோ பைடனின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதத்தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜனநாயக கட்சியின் மூத்த செனட் உறுப்பினரான சக் ஷுமர், ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு ஜோ பைடன் உடற்தகுதியுடன் உள்ளதாக தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

மேலும், தென் கரோலினா உறுப்பினரான ஜிம் கிளைபேர்னும் ஜோ பைடனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் ஜோ பைடன் தொடர்ந்தும் இருப்பது குறித்து ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என இல்லினோய்ஸ் மாநில உறுப்பினர் டிக் டர்பின் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு இடம்பெற்று சில மணி நேரத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட நியூ ஜேர்சி மாநில உறுப்பினர் மிக்கி ஷெரில், ஜோ பைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என வெளிப்படையாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.