D
இந்திய கிரிக்கட் ஆண்கள் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர், எதிர்வரும் இலங்கை சுற்றுப்பயணத்துடன் தனது பயிற்சிப் பணியைத் தொடங்கும் நிலையில், அனைவரது பார்வையும், அவரின் அணித்தேர்வில் குவிந்துள்ளது.
இந்தநிலையில் அணித்தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று (16.07.2024) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நடந்து முடிந்த உலகக்கிண்ண 20க்கு 20 கிரிக்கட் போட்டிகளின் பின்னர், ரோஹித் சர்மாவும், விராட் கோலியும், ரவீந்திர ஜடேஜாவும் 20க்கு 20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர்.
எனவே, அணிக்குள் உள்வாங்கப்படுவோர் தொடர்பில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், எதிர்பார்க்கப்படும் இலங்கைக்கான அணியில், சுப்மன் கில், ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரின்கு சிங், குல்தீப் யாதவ், அவேஸ் கான், அர்ஸ்தீப் சிங், ரவி பிஸ்னோய், துருவ் ஜூரல், வோசிங்டன் சுந்தர்,அபிசேக் சர்மா, சிவம் துபே, ஹர்சித் ராணா ஆகியோர் உள்ளடங்குவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.