Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

ஜனாதிபதி தேர்தல் குறித்து நிதி அமைச்சின் நிலைப்பாடு

0 2

ஜனாதிபதி தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் பணம் கொடுக்க தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு 2024 வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் திறன் நிதி அமைச்சுக்கு உள்ளது.

மேலும், தேர்தல் ஆணையத்திடம் தேவைக்கேற்ப பணம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.