D
மின்சாரக் கட்டணத் திருத்தத்தை அடுத்து, நீர்க் கட்டணங்களும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நீர்க்கட்டண குறைப்புத் தொகை குறித்த முடிவு இந்த வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) நேற்று (18.07.2024) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நீர் வழங்கல் சபை, இதற்கு முன்னர் மாதாந்தம் 2.8 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்டு வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் தற்போது சபை, 6.2 பில்லியன் ரூபாயை இலாபமாக ஈட்டுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் மத நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.