D
நெப்போலியன் திருமணத்திற்கு பெண் பார்க்க சென்றபோது அவரை திருமணம் செய்ய மாட்டேன், அவரை திருமணம் செய்தால் என்னுடைய கர்ப்பத்தை கலைச்சிடுவார் என்று அவருடைய மனைவி முடியாது என்று சொன்னதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் நெப்போலியன் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் 90களில் நாயகன், வில்லன் என பிசியான நடிகராக இருந்தவர் நெப்போலியன் என்பதும் அதன் பின் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் தனது மகனின் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார் என்பதும் அங்கேயே தற்போது தொழிலதிபராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நெப்போலியன் மகன் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் அவரது திருமணம் குறித்த சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மகனுக்கு ஜப்பானில் திருமணம் நடந்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நெப்போலியன் ஒரு பேட்டியில் தனது திருமணம் குறித்த ஒரு சுவாரசியமான தகவலை தெரிவித்துள்ளார். நெப்போலியன் பெற்றோர் அவருக்கு பெண் பார்த்த நிலையில் அந்த பெண்ணை பார்ப்பதற்காக தனது பெற்றோருடன் சென்றதாகவும் அப்போது இவர் தான் மாப்பிள்ளை என்று என்னை காண்பித்ததும் இவரை திருமணம் செய்ய மாட்டேன் என்று தான் பார்க்க சென்ற பெண் பயந்ததாகவும் கூறினார்.
இவர் ’எஜமான்’ படத்தில் மீனா வயிற்றில் உள்ள கருவை கலைத்தவர், நான் திருமணம் செய்தால் என் கருவையும் கலைத்து விடுவார், அந்த அளவுக்கு கொடுமைக்காரர் என்று கூறியதாகவும் அதன் பின்னர் அது எல்லாம் சினிமாவுக்கு தான், ஆனால் உண்மையில் அவர் நல்லவர் என்று அவரை சமாதானப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.