Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

தமன்னா நடனமாடினால் போதும்.. ஜெயிலர் படத்தை தாக்கி பேசினாரா

0 2

பார்த்திபன் தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட நபர்களில் ஒருவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் உருவான டீன்ஸ் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரை உலகளவில் ரூ. 90 லட்சம் வரை இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக பார்த்திபன் தொடர்ந்து பல ப்ரோமோஷன் பேட்டிகளில் கலந்துகொண்டார். இதில் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் அந்த பேட்டிகளில் பகிர்ந்துகொண்டார்.

இந்த நிலையில், ஒரு பேட்டியில் பேசிய பார்த்திபன் “ஒரு படம் நல்லா ஓடுறதுக்கு மிகப்பெரிய வெற்றிகரமான காரணமாக தமன்னாவின் அமைந்துவிடுகிறார். தமன்னா நடனமாடினால் போதும் அதற்கு பிறகு தான் அப்படத்தில் இருக்கும் கதை” என பேசியுள்ளார்.

பார்த்திபன் கூறியது ரஜினியின் ஜெயிலர், படத்தையும், சுந்தர்.சி-யின் அரணமனை 4 படத்தையும் என கூற நெட்டிசன்கள் இதனை வைரலாக்கி வருகிறார்கள். ஆனால், பார்த்திபன் படத்தின் பெயர்களை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.