D
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ அல்லது தொழிலதிபர் தம்மிக பெரேராவோ அல்லது வேறு எவரும் உத்தியோகபூர்வமாக கட்சிக்கு எழுத்து மூலம் அறிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் போட்டியிடுவது என்பது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சரியான நேரத்தில் வேட்பாளர் நியமனம் செய்யப்படுவார் எனவும், நாட்டின் கடனை செலுத்துவதற்காக உள்ளுர் வளங்களை விற்காத ஒருவரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்ஜனாதிபதி வேட்பாளராவார் எனவும் நாமல் கூறியுள்ளார்.
மேலும் வேட்பாளர்களை எதிர்பார்த்து பலர் கட்சியுடன் கலந்துரையாடி வருவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.