D
தளபதி விஜய் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.
கடந்த மாதம் விஜய் பிறந்தநாள் அன்று தான் இப்படத்திலிருந்து கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அந்த கிலிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடையே படுவைரலானது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் திரிஷா விஜய்யுடன் இணைந்து நடனமாடியுள்ளார் கூறப்படுகிறது. இதுவரை விஜய்யுடன் இணைந்து ஐந்து திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ள திரிஷா, GOAT திரைப்படத்தில் அவருடன் இணைந்து ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனடியுள்ளார்.
இது ஒரு குத்து பாடல் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே GOAT திரைப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளிவந்தன. இந்த இரண்டு பாடல்களும் விஜய் பாடியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து விரைவில் GOAT திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளிவரவிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கண்டிப்பாக இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.