D
முன்னணி நடிகரான தனுஷ் தற்போது இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் இது தனுஷின் 50வது திரைப்படமாகும்.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து முதல் முறையாக நடிப்பு அரக்கன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். இருவருக்கும் இடையிலான காட்சி கண்டிப்பாக திரையரங்க அதிர வைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்து முடிந்த நிலையில் நேற்று தெலுங்கில் ராயன் படத்திற்கான ப்ரீ ரிலீஸ் விழா நடைபெற்றுள்ளது. இதில் தனுஷிடம் நட்சத்திரங்கள் கேள்வி கேட்டு வந்தனர்.
அதில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் ‘இப்படத்தில் நீங்கள் நடிக்கவில்லை என்றால், வேறு யார் உங்களுடைய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்’ என தனுஷிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு தனுஷ், ‘சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்’ என கூறினார்.
தனது கதாபாத்திரத்தில் தனக்கு பதிலாக ரஜினிகாந்த் நடித்திருப்பார் என தனுஷ் கூறியவுடன் அந்த அரங்கமே அதிர்ந்துபோனது. அந்த வீடியோவையும் தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.