D
நடிகை நயன்தாரா மற்றும் கவின் இருவரும் ஜோடி சேர இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பே செய்தி வெளியானது எல்லோருக்கும் தெரிந்தது தான். 34 வயது கவினுக்கு அவரை விட 5 வயது மூத்த நடிகை நயன்தாரா ஜோடியாக நடிக்கிறாரா என பலரும் ஆச்சர்யமாக பேசினார்கள்.
ஆனால் இந்த படத்தின் கதையே அதுதானாம். வயது மூத்த பெண் மீது ஹீரோ காதலில் விழுவது போல தான் கதை எழுதி இருக்கிறாராம் இயக்குனர் விஜய் எடவன்.
டாடா படத்திற்கு பிறகு கவின் நடித்த ஸ்டார் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை, அதனால் அடுத்து நயன்தாரா உடன் அவர் நடிக்கும் படம் மீது எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.
இந்நிலையில் கவின் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக நெருக்கமாகி இருக்கும் போட்டோவை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கிறது.