D
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் அந்தாதுன்.
ஹிந்தியில் தயாராகி வெளியான இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே நடித்த இந்த படம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.
2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் ப்ருத்விராஜ் நடிப்பில் பிரம்மன் என்ற பெயரில் மலையாளத்தில் அந்தாதுன் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. தற்போது படம் தமிழில் பிரசாந்த் நடிக்க படு சூப்பராக தயாராகியுள்ளது.
இதில் பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தை பிரசாந்த் அப்பா தியாகராஜன் பார்த்து பார்த்து எடுத்துள்ளார்.
அண்மையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரசாந்திடம் உங்களுடைய சம்பளம் உங்களுக்கு கிடைத்ததா என கேட்டுள்ளனர். அதற்கு அவர், இந்த படமே என் சம்பளம் தான் என்று கூறியுள்ளார்.
நடிகர் பிரசாந்த் கோட் படத்திற்காக ரூ. 7 முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.