D
கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது தனுஷின் ராயன். இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். இது அவருடைய 50வது படமாகும்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான ராயன் படம் இதுவரை உலகளவில் ரூ. 82 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 41 கோடி வரை வசூல் செய்து, மாபெரும் ஓப்பனிங் கொடுத்துள்ளது.
ராயன் படத்தை பார்த்துவிட்டு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களது பாராட்டுகளையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். நேற்று ராகவா லாரன்ஸ் தனது விமர்சனத்தை கூறி தனுஷை புகழ்ந்திருந்தார்.
அதை தொடர்ந்து தற்போது தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் மகேஷ் பாபு ராயன் படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.
அதன்படி தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பு பிரில்லியண்ட் என்றும், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன் நடிப்பு வேற லெவல் performance என்றும் கூறியுள்ளார். மேலும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை குறித்தும் பாராட்டி பேசியுள்ளார். அனைத்து குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களையும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.