D
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் தனுஷின் நடிப்பில் வெளிவந்த 50வது திரைப்படமாகும்.
உலகளவில் ராயன் திரைப்படம் இதுவரை ரூ. 82 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை தனுஷ் நடிப்பில் வெளிவந்த எந்த திரைப்படத்திற்கு கிடைக்காத மாபெரும் வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்துள்ளது என திரை வட்டாரத்தில் கூறி வருகிறார்கள்.
உலகளவில் வசூலை வாரிக்குவிக்கும் ராயன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
உலகளவில் வசூலை வாரிக்குவிக்கும் ராயன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
நான்கே நாட்களில் உலகளவில் ரூ. 82 கோடிக்கும் மேல் வசூல் ஆகியுள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 100 கோடியை ராயன் கடந்துவிடும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராயன் படம் நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 41 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் என்னென்ன வசூல் சாதனைகளை செய்யப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.