Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் – பதிலடிக்கு தயாராகும் மத்திய கிழக்கு நாடு

0 2

ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை மற்றும் ஹமாஸ் ஆகியன இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக இஸ்மாயில் ஹனியே நேற்றைய தினம் ஈரானுக்கு பயணம் செய்துள்ளார்.

இதையடுத்து, குறித்த நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர், டெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டின் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் இஸ்மாயில் ஹனியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஹமாஸ் தலைவரின் மெய்பாதுகாவலர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டமைக்கு எதிராக ஹமாஸ் பதிலடி கொடுக்கும் என அந்த அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் இதுவரை எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹமாசின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் காணப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.