D
இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும் காதலித்த நாட்களில், தொலைபேசியில் அழைத்து கேட்டுடனான உறவை வில்லியம் துண்டித்ததைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இது உண்மையில் பழைய செய்திதான். ஆனால், தற்போது இளவரசி கேட்டின் வாழ்க்கை வரலாற்றை ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவர் எழுதியுள்ள நிலையில், இந்த தகவல் மீண்டும் வெளியாகியுள்ளது.
இளவரசர் வில்லியம் கேட் காதல் கதை கொஞ்சம் கரடுமுரடானதுதான்.
நண்பர்களாகப் பழகி, பின்னர், கவர்ச்சி உடையில் கேட் வாக் செய்த கேட்டின் அழகில் வில்லியம் மயங்கி, பின்னர் இந்தக் காதல் சரிவருமா என சந்தேகம் ஏற்பட்டு, இடையில் கொஞ்ச காலம் பிரிந்து, பிறகுதான் தம்பதியரானார்கள் இருவரும்.
இந்நிலையில், 2007ஆம் ஆண்டு, கேட்டை காதலிக்க காலகட்டத்தில், ஒருமுறை கேட்டை தொலைபேசியில் அழைத்த வில்லியம் அவருடனான உறவைத் துண்டித்துக்கொள்வதாக தெரிவித்தாராம்.
வில்லியம் தன்னிடம் காதலைச் சொல்வார் என கேட் காத்திருக்க, அவரை தொலைபேசியில் அழைத்த வில்லியம், நாம் கொஞ்ச காலத்துக்கு பிரிந்திருப்போம், அது இருவருக்கும் நல்லது என்று நினைக்கிறேன் என்று கூற, இருவருக்கும் சுமார் அரை மணி நேரம் வாக்குவாதம் நடந்துள்ளது.
அப்படி பிரிந்த ஜோடி, மீண்டும் ஒரு பார்ட்டியில் சந்திக்க, மீண்டும் காதல் துளிர்க்க, 2010ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம், 2011ஆம் ஆண்டு திருமணம் என இணைந்துள்ளது வில்லியம் கேட் ஜோடி.
இந்த தகவலை தற்போது ’Catherine, The Princess of Wales’ என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ராஜ குடும்ப எழுத்தாளரான ராபர்ட் ஜாப்சன்.