D
80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக ஜொலித்த கௌதமியை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் போன்ற பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். தற்போது கௌதமி சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கௌதமி, ரிலேஷன்ஷிப் குறித்து பேசியுள்ளார். அதில், “ஒரு ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் இருக்கும் போது அந்த அந்த ரிலேஷன்ஷிப் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால், அதற்கான எல்லா பொறுப்பையும் நீங்கள் எடுக்க தேவை இல்லை”.
“இருவருக்கும் இடையேயான அன்பு, அர்ப்பணிப்பு உள்ளிட்டவை சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உறவு நீண்ட நாட்கள் நீடிக்கும். எந்த விதமான ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் அதற்கு இடையே ஒரு மையப் புள்ளி ஆனது கண்டிப்பாக இருக்கும். இரண்டு பேர் இருக்கும் ரிலேஷன்ஷிப்பில் 50 % தாண்ட கூடாது. இதை நான் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பாடமாக கற்று இருக்கிறேன்” என்று கௌதமி கூறியுள்ளார்.