D
தமிழ் சினிமாவில் பக்தி படங்களுக்கு என்று ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படங்களில் ஒன்று பாளையத்து அம்மன்.
அந்த படத்தில் குழந்தையாக நடித்து அசத்தி இருந்தவர் அக்ஷயா ஜெயராம். அவர் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்த நிலையில் அதன் பின் சினிமா துறையில் இருந்தே காணாமல் போனார்.
அக்ஷயா படிப்பில் கவனம் செலுத்துவதற்காக தான் சினிமாவில் இருந்து விலகினாராம். படிப்பை முடித்து தற்போது மார்க்கெட்டிங் வேலையில் பணியாற்றி வருகிறாராம்.