D
சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜ் மற்றும் ரோகிணி ஆகியோரை வெளியில் அனுப்பிவிட்டு முத்து மற்றும் மீனா இருவரும் ரூமில் சென்று தூங்குகின்றனர்.
ஹாலில் தூங்கும் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் இது பற்றி புலம்புகின்றனர். மனோஜ் காலையில் எழுந்து அம்மாவிடம் புலம்புகிறார். தான் இரவு முழுவதும் தூங்கவே இல்லை, முத்துவிடம் இருந்து ரூமை வாங்கி கொடுங்க என கெஞ்சுகிறார்.
ஆனால் தன்னால் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது என விஜயா கூறி விடுகிறார்.
அதன் பின் எல்லோரும் சாப்பிடும்போது கடையை திறப்பது பற்றி பேசுகிறார்கள். ரிப்பன் கட் செய்ய ஒரு பெரிய நடிகையுடன் பேச்சு வார்த்தை நடப்பதாக மனோஜ் சொல்கிறார்.
அதற்காக 2 லட்சம் ருபாய் செலவு ஆகும் என்றும் கூறுகிறார். அதற்கு வீட்டில் எல்லோரும் வேண்டாம் என்கிறார்கள். அம்மாவை வைத்து கடையை திற என முத்து சொல்கிறார்.
நீண்ட நேரம் மனோஜ் முடியாது என சமாளிக்க நினைக்கிறார். ஆனால் இறுதியில் அம்மாவை வைத்தே கடையை திறக்க மனோஜ் ஒப்புக்கொள்கிறார்.