D
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பு திறமைக்கு ரசிகர்கள் ஏராளம்.
ஆரம்பத்தில் ஹோம்லியாக மட்டுமே இருந்து வந்த அவர் தற்போது சற்று கிளாமராகவும் புகைப்படங்கள் வெளியிட தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கே ஆச்சர்யம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யார் ராஜேஷ் ஒரு விருது விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் “உங்களுக்கு ஒரு பெரிய பாலிவுட் நட்சத்திரம் அல்லது தென்னிந்திய நட்சத்திரத்துடன் டின்னர் சாப்பிட ஆசை என்றால் அது யாருடன்” என கேள்வி கேட்கப்படடிருக்கிறது.
அதற்கு அவர் தளபதி விஜய் என கூறி இருக்கிறார். அவரது ஆசை நிறைவேறுமா?