D
மலையாள திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகர் பகத் பாசில்
Kaiyethum Doorath எனும் திரைப்படம் தான் இவருடைய முதல் மலையாள திரைப்படமாகும். இப்படத்தை பகத் பாசிலின் தந்தையும், பிரபல மூத்த இயக்குனருமான பாசில் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மலையாளத்தில் ஹீரோவாக வலம் வந்த பகத் பாசில், 2017ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார். இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
இதன்பின் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் மாமன்னன் ஆகிய படங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் பகத் பாசிலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பகத் பாசிலின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது.
கேரளாவில் கொச்சியில் இவருக்கு சொந்தமான பிரமாண்ட வீடு ஒன்றும் உள்ளது. மேலும் Porsche 911 Carrera S, Mercedes Benz E Class, Range Rover Vogue உள்ளிட்ட சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்துள்ளாராம்.