Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

நடிகைகளுடன் கிசுகிசு.. கணவர் அஜய் தேவ்கன் பற்றிய வதந்திக்கு கஜோல் பதிலடி!!

0 1

பாலிவுட் திரையுலகில் பிரபல நட்சத்திர ஜோடியாக கவனம் பெறுபவர்கள் கஜோல் மற்றும் அஜய் தேவ்கன். இந்த தம்பதியருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

திருமணத்திற்கு பின்னரும், கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக பணியாற்றி வருகிறார்கள்.

நடிகர் அஜய் தேவ்கன், திருமணத்திற்கு பின்பு நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கிறார் என்று கிசுகிசுக்கள் எழுந்தது. இதற்கு கஜோல் ஒருமுறை தன்னுடைய ஸ்டைலில் நச்சென பதிலளித்தார்.

​ அதில், “நான் எப்போதும் வதந்திகளை நம்பவில்லை. ஏனென்றால் படப்பிடிப்பு எப்படி இருக்கும் என்பதை நன்கறிவேன் . அடிப்படை புரிதல் இல்லாமல் திருமண வாழ்க்கையைத் தொடர முடியாது. அதனால் வதந்திகள் பற்றி என்றைக்கும் கவலைப்படுவதில்லை” என்று கஜோல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.