Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

விக்ரமின் தங்கலான் படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடி வசூலித்துள்ளதா?.. முழு விவரம்

0 1

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபமி மற்றும் பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் தங்கலான்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது, படத்தின் டிரைலரும் வெளியாகி மக்களை வியக்க வைத்துள்ளது.

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் அதிகம் இருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த படத்திற்காக படக்குழுவினர் அனைவருமே தங்களது உடலை வறுத்தி நடித்துள்ளனர், அவர்களின் உழைப்பை தான் சரியாக பயன்படுத்தி படம் எடுக்க வேண்டும் என்ற பயம் இருந்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் நமது சினிஉலகம் பேட்டியில் கூறியிருப்பார்.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் ப்ரீ புக்கிங் படு சூடாக நடக்கிறது. இதுவரை தங்கலான் படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும் ரூ. 1.8 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.