D
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி சீசன் 5.
ரக்ஷன் மற்றும் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் நடுவர்களாக இருக்கிறார்கள். இந்த சீசனில் விஜே பிரியங்கா, விடிவி கணேஷ், திவ்யா துரைசாமி, சுஜிதா, ஷாலின் சோயா உள்ளிட்ட 10 திரை நட்சத்திரங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
இதில் இதுவரை நடந்து வந்த போட்டிகளில் நடுவர்களிடம் இருந்து குறைவான மதிப்பெண்களை பெற்ற ஸ்ரீகாந்த் தேவா, வசந்த் வசி, சோயா ஆகிய மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இதுவரை போட்டியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் இதுவரை நன்றாக சமைத்து வந்த பூஜா இன்று நடைபெற்ற எலிமினேஷன் போட்டியில் குறைவான மதிப்பெண்களை பெற்று போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார்.
சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமாகி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த பூஜாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், தற்போது இவருடைய எலிமினேஷன் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது.