D
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாகத் திரைக்கு வரவிருக்கும் படம் வேட்டையன். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க ஞானவேல் இயக்கியுள்ளார். அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பல ஆண்டுகளுக்குப் பின் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியர், பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா எனப் பலரும் முக்கிய கதாபாத்திரத்திலில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தான் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க பிரமாண்டமான முறையில் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் போலவே வேடமிட்டு அதனை வீடியோ எடுத்து வெளியிடுவார்கள். அந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். எம்.ஜி.ஆர், சிவாஜியிலிருந்து இன்று சிவகார்த்திகேயன் வரை இது போன்ற விஷயங்கள் நடந்துள்ளது.
இந்த நிலையில், ஜெயிலர் படத்தில் வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை போலவே ரசிகர் ஒருவர் வேடமிட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. ரஜினியை போல் வேடமிட்டு இருந்தது மட்டுமல்லாமல் அவரைப் போலவே ஸ்டைலாகவும் சில விஷயங்களைச் செய்து அசத்தியுள்ளார்.