D
கொழும்பு – கண்டி வீதியில் கிரிபத்கும்புர கெஹேல்வல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று (20.08.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்தை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த பேருந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது, காரில் பயணித்த பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.