D
அயர்லாந்து, ஸ்டோர்மாண்டில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில், தொடர் வெற்றியாளரான அயர்லாந்துக்கு எதிராக இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
முன்னதாக இரண்டு போட்டிகளுக்கு மாறாக, போட்டியின் முதல் இரண்டு பந்துகளில் இலங்கையின் அச்சினி குலசூரிய, அயர்லாந்தின் துடுப்பாட்ட வீராங்கனைகளான சாரா ஃபோர்ப்ஸ் மற்றும் ஏமி ஹன்டரை வெளியேற்றியதால், அயர்லாந்தின் துடுப்பாட்டம் தடுமாற்றம் அடைந்தது.
தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்ததால், அயர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 122 ஓட்டங்களை பெற்றிருந்தபோது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஏழாவது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் விஸ்மி குணரத்ன ஆட்டமிழந்தபோதும், அது இலங்கை அணியை அழுத்தத்துக்கு உட்படுத்தவில்லை.
இதனையடுத்து சாமரி அதபத்துவின் 48 ஓட்டங்களையும், ஹர்சிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்தநிலையில் மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரில் அயர்லாந்து அணி 2க்கு 1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.