D
சினிமாவின் என்சைக்லோபீடியா என்று அன்பாக ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் கமல் ஹாசன்.
சினிமாவில் வாழ்க்கை பல விஷயங்களை சாதித்து இருந்தாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.
கமல் ஹாசனின் மூத்த மகள் திரைத்துறையில் முன்னணி நடிகை வலம் வந்துகொண்டு இருக்கிறார். ஆனால் அக்ஷரா ஹாசன் ஒரு சில படங்களே நடித்திருக்கிறார். அந்த படங்களுக்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அக்ஷரா ஹாசன், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “என்னுடைய அப்பா அம்மா பிரிந்த போது, அதை எப்படி ஹாண்டில் பண்ணுவது என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை. மற்ற குழந்தைகள் போல தான் நாங்களும் பீல் பண்ணோம்”.
“எல்லாமே சரியாகிவிடும் என்று மனதை தேற்றிக்கொண்டோம். அம்மா அப்பா இல்லாத கவலையை என்னுடைய அக்கா தான் போக்கினார்” என அக்ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.