D
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என சில காதல் படங்களை கொடுத்து ஹிட் காணும் நடிகர்கள் உள்ளார்கள்.
ஆனால் எனது கலை பசிக்கு ஏற்றவாரு கதை உள்ளதா என தேடி தேடி மிகவும் கடினமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருபவர் தான் விக்ரம்.
அதற்கு உதாரணமாக சமீபத்தில் அதாவது கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான படம் தான் தங்கலான்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா, பசுபதி என பலர் நடிக்க வெளியான இப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது.
படு சந்தோஷத்தில் இருக்கும் தங்கலான் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி கூறி வருகிறார்கள்.
அப்போது ஒரு நிகழ்ச்சியின் விக்ரம், பா.ரஞ்சித்துடன் புகைப்படம் எடுக்கும் போது அவரது போனில் ஒரு கியூட்டான Wallpaper ரசிகர்களின் கண்களில் தென்பட்டுள்ளது.
அதாவது அவர் தனது பேத்தியின் அழகிய கைகளை Wallpaperஆக வைத்துள்ளார்.
நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கு மனு ரஞ்சித் என்பவருடன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.