D
தாடி, நீளமான முடி என ஆளே மாறிய காக்கா முட்டை பட சிறுவன்- சமீபத்தில் யாரை சந்தித்துள்ளார் பாருங்க, வைரல் போட்டோ
தமிழில் 2015ம் ஆண்டு வெளியான ஒரு ஹிட் படம் காக்கா முட்டை.
மணிகண்டன் இயக்கத்தில் தனுஷ், வெற்றிமாறன் இணைந்து தயாரிக்க படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் முக்கிய வேடத்தில் நடித்த இப்படத்தில் ரமேஷ் திலக், யோகி பாபு போன்றவர்கள் நடித்திருந்தனர்.
படத்தில் பெரிய நடிகர்களை தாண்டி சிறுவர்களாக நடித்து அசத்திய விக்னேஷ் மற்றும் ரமேஷ் என்பவர்களுக்கு தான் அதிக பாராட்டே மக்களிடம் கிடைத்தது.
இப்படத்திற்கு பிறகு விக்னேஷ், சமுத்திரக்கனியின் அப்பா படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் ரமேஷின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அவர் நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்துள்ளார், ரமேஷிற்கு முத்தத்தையும் கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் தான் இப்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் வைரலாகிறது.