D
விஜய் டிவி ரசிகர்கள் ரியாலிட்டி ஷோக்களை தாண்டி சீரியல்களுக்கும் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
அப்படி சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, மகாநதி, ஆஹா கல்யாணம் என நிறைய வெற்றிப்படங்கள் ஒளிபரப்பாகின்றன.
இதில் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது.
ஏற்கெனவே வெற்றிகரமாக ஓடும் சிறகடிக்க ஆசை சீரியல் தெலுங்கில் ரீமேக் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இன்னொரு தொடர் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறதாம்.
எந்த தொடர் என்றால் அது தமிழிலேயே உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் தெலுங்கில் Illu Illalu Pillalu என்ற பெயரில் ரீமேக் ஆக இருக்கிறதாம்.