D
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவான அமரன் படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
உண்மை சம்பவத்தை மையமாக உருவாகியுள்ள இப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் சுதா கொங்கராவுடன் இணைய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் அதற்கான மீட்டிங் நடைபெற்று இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.