D
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஜீவா. ஜீவாவின் அப்பா சினிமாவில் இருக்கிறார் என்பதால் ஜீவாவுக்கு முதலாவது பட வாய்ப்பு எளிதில் கிடைத்து இருக்கலாம். ஆனால் அவர் தற்போது வரை சினிமாவில் நிலைத்திருக்க காரணம் அவரது நடிப்பு மட்டும் தான்.
எது எவ்வாறாயினும் சமீப காலமாக அவர் பெரிய ஹிட் படங்களைக் கொடுக்க முடியாமல் மல்டிஸ்டார் படங்களில் தான் தலையை காட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது பாலசுப்ரமணி KG இயக்கத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள படத்திற்கு ‘BLACK’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் First Look போஸ்டரை பகிர்ந்துள்ளது தயாரிப்பு நிறுவனம். திரைப்படம் செப்டம்பரில் வெளியாகவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.