D
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் தான் சுகன்யா.
பரதநாட்டிய கலைஞரான இவர் நடிப்பை தாண்டி நாட்டியம் தான் தனக்கு மிகவும் பிடித்தது என்று எப்போதும் கூறுபவர்.
இவர் முதன்முதலாக புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தான் நாயகியாக அறிமுகமானார், முதல் படத்திற்கே பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.
தமிழை தாண் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமில்லாமல் சுகன்யா டப்பிங் கலைஞராகவும் இருந்துள்ளார், சீரியலில் நடித்துள்ளார், இப்போது இசையமைப்பாளராகவும் கலக்கி வருகிறார்.
இப்படி சினிமாவில் பல திறமைகளை வெளிக்காட்டிய சுகன்யா திருமண வாழ்க்கை நல்லதாக அமையவில்லை.
தற்போது சக்தி ஐபிஎஸ் சீரியல் மூலமாக சின்னத்திரையில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் சுகன்யா சமூக வலைதளங்களில் வைரலாகும் தனது மகள் புகைப்படம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், எனது மகள் என்று கூறி சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படத்தில் இருப்பவர் எனது அக்கா மகள். முழு தகவலுடன் நான் தான் இந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்தேன், ஆனாலும் தவறாக பதிவு செய்கிறார்கள்.
நானும் இந்த செய்திகளை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன், சித்தியால் நான் பிரபலம் ஆகிவிட்டேன் என அக்காவின் மகள் ஜாலியாக கூறிக்கொண்டு இருக்கிறாள்.
நாங்களே இவர்கள் இப்படிதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம் என பேசியுள்ளார்.