D
சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் உள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 66 பேரும், விளக்கமறியலில் உள்ள 265 பேரும் அடங்குவர்.
கடந்த ஆண்டு வரை சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 185006 எனவும் அவர்களில் 14,952 பேர் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, மீதமுள்ள கைதிகளில் சராசரியாக 44,614 சாதாரண தரபரீட்சையில் சிக்கியடைந்தவர்களாகும்.
64,684 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களாகும். 5ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் 34,673 பேரும், 1-5 தரத்தில் தேர்ச்சி பெற்றவர் 20,188 பேரும் இருப்பதாகவும் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் பாடசாலைக்கு செல்லாத 5370 பேர் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.