D
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் 25 ஆயிரம் வாக்குப் பெட்டிகள் உள்ளதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டின் நீளத்திலேயே இந்த ஆண்டுக்கான வாக்குச் சீட்டு குறியிடும் தாள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாக்குச் சீட்டின் நீளம் 26 அங்குலம் ஆகும்.