D
சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல நடிகை- அவருக்கு பதில் நடிக்கப்போவது இவரா?
சன் டிவியில் தொடர் ஆரம்பித்ததில் இருந்தே டிஆர்பியில் டாப்பில் இருக்கும் சீரியல் சிங்கப்பெண்ணே.
சீரியல் தொடங்கி சில மாதங்களே ஆனாலும் தொடருக்கு கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்கள் என தொடருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
கிராமத்தில் இருந்து தன்னுடைய வீட்டு சூழ்நிலைக்காக சென்னைக்கு வேலைக்கு வரும் ஆனந்தி என்ற பெண்ணை மையப்படுத்தி இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
அவர் வேலைக்கு வந்த பிறகு சந்திக்கும் பிரச்சனைகள், காதல், நட்பு என்று இந்த சீரியலின் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சீரியலில் ஆனந்தியின் தோழியாக ரெஜினா வேடத்தில் நடித்துவந்த நடிகை ஜிவி டிம்பிள் திடீரென சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.
காரணம் அவர் சன் டிவியின் புதிய தொடரில் நாயகியாக நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. ரெஜினா கேரக்டரில் ஜிவி டிம்பிள்க்கு பதிலாக வீஜே கல்யாணி நடிக்க இருக்கிறார்.
விஜே கல்யாணி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.