Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

கார்த்திகை தீபம் சீரியல் நடிகர் கார்த்திக ராஜ் தவறானவரா, படப்பிடிப்பில் எப்படி நடந்துகொண்டார்- நடிகை அதிரடி பதில்

0 2

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், ஆபீஸ் போன்ற பல சீரியல்களில் நடித்து மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகர் கார்த்திக் ராஜ்.

இந்த சீரியல்கள் பெரிய ஹிட், அடுத்ததாக அப்படியே ஜீ தமிழ் பக்கம் வந்தவர் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஓடி சாதனை படைத்த செம்பருத்தி தொடரில் நாயகனாக நடித்து வந்தார்.

டிஆர்பியில் முதல் இடம் எல்லாம் பிடித்த இந்த தொடரில் இருந்து தயாரிப்பு குழுவுடன் ஏற்பட்ட தகராறால் பாதியிலேயே வெளியேறினார் கார்த்திக். பின் படம் நடிக்க போகிறேன் என இயக்கி, நடிக்க அப்படம் சரியான அளவில் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் தான் மீண்டும் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் என்ற தொடரில் நாயகனாக நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் ரசிகர்கள் கொண்டாடும் தொடரின் நேரம் மாற்றம்- எந்த தொடர், எப்போது, முழு விவரம்
விஜய் டிவியில் ரசிகர்கள் கொண்டாடும் தொடரின் நேரம் மாற்றம்- எந்த தொடர், எப்போது, முழு விவரம்
இந்த தொடரில் கார்த்திக் அம்மாவாக மீரா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

இவர் அண்மையில் இந்த தொடர் குறித்தும், கார்த்திக் பற்றியும் பேசியுள்ளார். அதில் அவர், இந்த சீரியலில் கமிட்டானபோது கார்த்திக் ராஜ் பற்றி எல்லோரும் தவறாக பேசினார்கள், அந்த நேரத்தில் சில சர்ச்சைகளும் வந்தது.

ஆனால் சீரியலில் நான் அவரோடு நடித்த பிறகுதான் எனக்கு அவரைப் பற்றி புரிந்துகொள்ள முடிந்தது. சீரியலில் நான் அவருக்கு அம்மாவாக நடிப்பதால் நிஜத்திலும் அம்மாவிடம் பழகுவது போல் தான் நடந்துகொள்வார்.

நிஜத்தில் நாம் ஒருவரோடு பழகும்போது தான் அவரைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. நான் இப்போது கார்த்திக் ராஜ் பற்றி நன்றாக புரிந்துகொண்டேன் என நல்ல விதமாக கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.