D
தமிழ் சினிமாவில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. சிவகுமாரின் மகன், சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்துடன் களமிறங்கிய இவர், இன்று தனக்கென்று தனி அடையாளத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை. அடுத்ததாக சர்தார் 2, மெய்யழகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நேற்று மெய்யழகன் திரைப்படத்திலிருந்து First லுக் போஸ்டர் வெளிவந்து வைரலானது.
இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதை பார்க்கலாம்.. நடிகர் கார்த்தி ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 8 முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.
மேலும் இவர் விளம்பரங்களில் நடிக்க ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். மேலும் சென்னை தியாகராய நகரில் ரூ. 30 கோடி மதிப்பில் வீடு மற்றும் ஒரு பிளாட்டை சொந்தமாக வைத்துள்ளாராம் கார்த்தி என தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இவை யாவும் இணையத்தில் கூறப்படும் தகவல் மட்டுமே, இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.