D
மீண்டும் அண்ணாமலையை சீண்டிய ஸ்ருதியின் அம்மா- முத்து செய்த அதிரடி வேலை, சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த வார கதைக்களம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது விறுவிறுப்பான கதைக்களம் ஒளிபரப்பாகிறது.
படித்ததில் இருந்து ஒரு வேலையும் சரியாக செய்யாமல் சுற்றி வந்த மனோஜிற்கு முத்துவால் ஒரு கடைக்கு ஓனர் ஆகும் நல்ல விஷயம் நடந்துள்ளது.
ஆனால் அந்த கடை திறப்பு விழாவில் விஜயா, மனோஜ், ரோஹினி செய்தது எல்லாம் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
ரோஹினி பற்றிய விஷயம் எப்போது வீட்டிற்கு தெரியவரும் என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
முதல் நாள் அதிகமான வேலை செய்த மனோஜ் அடுத்த நாள் எழவே இல்லை, தூங்கிக் கொண்டே இருக்கிறார். அண்ணாமலை, முத்து எல்லாம் ஒரு நாளைக்கே இப்படியா பொறுப்பு வரவே இல்லை என பேசுகிறார்கள்.
இன்றைய எபிசோடு முடிந்ததும் ஒரு குட்டி புரொமோவில் ஸ்ருதியின் அம்மா தான் வாங்கிய ஏசியை அண்ணாமலை வீட்டிறகு அனுப்பி வைக்கிறார்.
இதனை தெரிந்துகொண்ட முத்து அவருக்கு போன் செய்து Left And Right வாங்கி அந்த ஏசியை திருப்பி அனுப்புகிறார்.